அகல் விளக்கை இந்த திசையில் வைத்தால் துரதிஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கும்! பேராபத்து கூட நிகழும்… எந்த திசையில் வைத்தால் லட்சாதிபதியாகலாம்?
பூஜை என்றாலே அதில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது விளக்காகும். விளக்கானது அறிவு, நேர்மறை சக்தி, ஆற்றல் போன்றவற்றின் அடையாளமாக இருக்கிறது. மேலும் மண்ணால் செய்யப்பட்ட விளக்கை வீட்டில் ஏற்றுவது புனிதமான ஒன்றாக இந்து மாதத்தில் கருதப்படுகிறது.
தினமும் விளக்கேற்றுவது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் இருள், அறியாமை மற்றும் எதிற்மறை சக்திகளை விரட்டும் என்று கூறப்படுகிறது. அகல் விளக்கை எந்தெந்த திசையில் ஏற்றினால் என்னென்ன நன்மை மற்றும் எந்த திசையில் ஏற்றினால் கடன் சுமை அதிகரிக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.
கிழக்கு - அகல் விளக்கை கிழக்கு திசையில் ஏற்றினால் உங்களை பின்தொடரும் துன்பங்கள் நீங்கும், சமூகத்தில் நல்ல மதிப்பும், பணமும், பெயரும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மேற்கு - மேற்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால், உறவுகளின் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் உள்ள கடன் தொல்லைகள் விளகம்.
வடக்கு - வடக்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால் வீட்டில் மங்களகரமான செயல்கள் நடக்கும், செல்வம் பெருகும், மகிழ்ச்சி நிறையும். தெற்கு - தெற்கு திசையில் அகல் விளக்கை ஏற்றினால் எதிர்பாராத தொல்லைகள், கடன் சுமை மற்றும் எதிர்மறை தாக்கங்கள் வீட்டில் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.
பஞ்சு திரி - பஞ்சு திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றுவதால் வாழ்க்கையில் சுபம் கூடும்.
வாழை தண்டு திரி - வாழை தண்டி திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வெள்ளெருக்கு பட்டை திரி - வெள்ளெருக்கு பட்டை திரி பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் செய்வினை விலகும், ஆயுள் அதிகரிக்கும்.