காதலியை பின் தொடர்ந்து காதலன் செய்த கொடூர செயல்; ரத்தம் தெறிக்க அலறிய பெண்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அந்தேரி லோக்கன்ட்வாலா பகுதியை சேர்ந்தவர் சாகிர்கான். இவர், இரண்டு வருடமாக, அங்குள்ள வணிக வளாகத்தில் பணியாற்றி வரும் இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காதலனுக்கு காதலி மற்றொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சம்பவத்தன்று, காதலியை நோட்டமிட்ட காதலன் பணிக்கு கிளம்பி செல்கையில் பின்னாலேயே பின்தொடர்ந்து சென்றுள்ளான். அப்போது, அந்த பெண வாலிபர் ஒருவருடன் நின்று பேசவே, ஆத்திரமடைந்த கொடூர காதலன், காதலியின் கைகளை பிடித்து இழுத்து பிளேடால் அறுத்துள்ளான். அதன் பின்னர், அங்கிருந்து தப்பி செல்லவே, இரத்தம் பீறிட்டு வெளியேறி அலறித்துடித்த பெண்மணியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில் உண்மை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல் துறையினர் சாகிர்கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.