கட்டாயப்படுத்திய காதலி... நண்பனுடன் சேர்ந்து காதலன் செய்த கொடூரம்
திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியை தனது நண்பர்களுடன் சேர்ந்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் அருகே கடந்த 5ம் தேதி 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் அந்த பெண் கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ ஆவார். தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 1ஆம் தேதி வேலை சென்றவர் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் புகாரின் பேரில் பொலிஸார் ஜெயஸ்ரீயை தேடி வந்தனர். இந்த நிலையில் அவரது சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் அந்த பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த போது, ஒரே நாளில் ஒரு நம்பருக்கு மட்டும் 20 தடவைக்கும் மேல் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. குறித்த நம்பரை ஆய்வு செய்த போது, அது ஜெயஸ்ரீயுடன் வேலை பார்த்து வந்த தங்கதுரையின் எண் என்பது தெரியவந்தது.
விசாரணையில் ஜெயஸ்ரீயும் தங்கதுரையும் காதலித்து வந்ததாகவும், இந்த விவகாரம் ஜெயஸ்ரீயின் பெற்றோருக்கு தெரிந்து கண்டித்ததாகவும் கூறப்படுகின்றது. பின்பு ஜெயஸ்ரீ தங்கதுரையுடன் வெளியே வந்ததுடன், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் தங்கதுரை தனது நண்பர் ஜெகந்நாதனும் சேர்ந்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது இருவரையும் கைது செய்த பொலிசார், அவரை திருமணம் செய்ய மறுத்தது ஏன் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.