சுக்கிரனின் காதல் யோகம் இன்பத்தை மட்டும் அனுபவிக்கப்போகும் ராசிகள் யார் யார்?
சுக்கிர பகவான் ஒவ்வொரு முறையும் தன் இடத்தை மாற்றும் போது அனைத்து ராசிகளுக்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். இது சாஸ்திர ஜோதிடத்தின் படி தெரிந்த விஷயம்.
இந்த தடவை ஜூன் 12-ம் தேதி அன்று மிதுன ராசிகள் நுழைந்துள்ளார். இந்த சுக்கிர இடமாற்றம் ஒரு காதல் யோகமாக திகழ்வதால் சில ராசிகள் எல்லாவிதத்திலும் இன்பத்தை மட்டுமே அனுபவிக்கபோகிறார்கள். அது எந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.
ரிஷபம்
இந்த காதல் யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றது. இதனால் உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகிறது காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த தருணத்தில் வாழ்கை துணையின் அனைத்து அன்பும் அரவணைப்பும் கிடைக்கும். பணப்பிரச்சனை இருக்காது.
மிதுனம்
இந்த சுக்கிர காதல் யோகத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். பண வரவால் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக மாறும்.
காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். இனிமேல் சிறப்பான மறக்க முடியாத நினைவுகள் உங்களை தேடி வரும்.
சிம்மம்
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருவதால் வாழ்க்கை துணையோடு சிறப்பான பலன்கள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
காதல் வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். எனவே இந்த கால கட்டத்தில் எந்த காரியத்தையும் துணிந்து செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |