கொட்டும் மழையில் இரண்டு புறாக்களின் பாச போராட்டம்... வியப்பூட்டும் காட்சி
கொட்டும் மழையில் இரண்டு புறாக்கள் ஒன்றையொன்று நனைய விடாமல் பாதுகாக்கும் நெகிழ வைக்கும் காட்சியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே இவ்வுலகில் அனைவரினதும் அடிப்படை தேவை பாசம் தான். அதிலும் எந்தவித ரத்த சம்பந்ததும் இல்லாத போதும் நாம் ஒருவர் மீது வைக்கும் அன்பு மிகவும் உன்னதமானது.
இப்படியான அன்பை பெற்றவர்கள் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள் தான். எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாத காதல் மிகவும் அழகானது.
அன்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒரு உணர்வாகவே இருக்கின்றது. உண்மையில் சொல்லப் போனால் அன்பு என்ற ஒற்றை சொல் மந்திரத்தில் தான் இந்த பிரபஞ்சமே இயங்கிக்கொண்டிருக்கின்றது.
அதனை பறைசாற்றும் வகையில் கொட்டும் மழையில் இரண்டு புறாக்கள் அன்பை வெளிப்படுத்தும் அழகிய காட்சி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |