கண்களில் இருந்து கண்ணீரை பிழியச் செய்யும் காதலின் வலிகள்!
பொதுவாக நாம் பருவமடைந்த காலங்களில் இருந்து காதலை வித்தியாசமான முறைகளில் பார்த்திருப்போம்.
அதில், அம்மாவின் காதல், சகோதரர்களின் காதல், காதலர்களின் காதல், என காதல் நபருக்கு நபர் வித்தியாசப்படுகின்றன.
காதலிக்கும் போது அது என்ன உறவு என்ன கண் தெரியாது அந்தளவு ஒரு அன்பை கொண்டிருக்கும். தற்போது வரும் பாடல்களின் வரிகளை காதலை காமமாக காட்டிருப்பார்கள்.
ஆனால் 90களில் வெளியான பாடல்கள் காதலை உயிருக்கு மேலான ஒரு உணர்வாக காட்டிருப்பார்கள்.
அந்த வகையில் காதலை பற்றியும் அதனால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
காதலர்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் வந்தாலே ஞாபகம் வந்தாலே நினைவுக்கு வருவது “காதலர் தினம்” தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் இந்த “காதலர் தின கொண்டாட்டம்” ஆரம்பமாகியது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். “கிளாடியுஸ் மிமி ” என்ற அரசன் ஆட்சி செய்யும் போது யாரும் திருமணம் செய்யக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் ஊர் மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் அரசனின் அறிவிப்பை மீறி இரகசியமாக அனைவரும் திருமணங்களை நடத்தி வைத்தான்.
இதனையறிந்த மன்னன் வால்ண்டைனை கைது செய்ததோடு, மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதற்கிடையில் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், சிறைக்காவலருக்கு இது தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தான்.
அப்போது தான் வாலண்டைன் அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்து அட்டை மூலம் செய்தி அனுப்பினார். இதனை தொடர்ந்து வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்தரவை செய்யப்பட்டு கடந்த கி.பி.270, பிப்ரவரி 14ம் நாள் திகதி கொள்ளப்பட்டார்.
இந்த நாளை நினைவுப்படுத்தும் விதமாக இந்த காதலர்கள் தினம் அனுஸ்டிக்கபட்டு வருகின்றது.
காதலர்களுக்கு தேவையான விடயங்கள்
1. அன்பு
2. நம்பிக்கை
3. விட்டு கொடுப்பு
4. தைரீயம்
5.அணுசரிப்பு
1. அன்பு
காதலர்கள் என்று கூறும் போதே அவர்களுக்கு இடையில் அன்புக்கு குறைவு இல்லாமல் தான் இருக்கும். மேலும் காதலை காதலன்,நண்பன், மனைவி, குழந்தைகள், அம்மா, அப்பா, தங்கை என அனைத்து உறவு முறையிடமும் காட்டலாம்.
ஆனால் அதனை வெளிகாட்டும் விதம் தான் சற்று வித்தியாசமாக இருக்கும். காதலில் யாரும் இது வரை வெற்றி பெற்றிருக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் என்ன? காதலுக்கு எப்போது என்ட் கார்ட் கிடையாது.
2. நம்பிக்கை
ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையாக இருந்தார்கள் என்றால் வாக்குவாதம் என்று கண்டிப்பாக வாழ்க்கையில் வராது. வாழ்க்கையின் அர்த்தத்தை இந்த நம்பிக்கை தான் உணர்த்துகிறது. ஆனால் கணவன் - மனைவி, அம்மா - குழந்தைகள் இவர்களிடம் இருக்கும் காதலில் நம்பிக்கை யாரும் சொல்லாமல் வந்து விடும். இது தான் காதலின் சித்தம்.
3. விட்டு கொடுப்பு
ஒரு வீட்டில் காதல் என்ற ஒரு விடயம் அதிகம் இருந்தால் அந்த வீட்டில் வீண் வாக்குவாதங்களுக்கு இடமே இருக்காது. அந்தளவு வாழ்க்கையின் உச்சத்தை காட்டும் வழி தான் காதல். போட்டி, பொறாமை, விட்டு கொடுப்பு, என அனைத்து விடயங்களிலும் காதலில் இருக்கின்றன. இதனையே சிலர் காதலுக்கு கண் இல்லை எனக் கூறுவார்கள்.
காதலின் வலியை உணர்த்து சில வரிகள் இதோ
1. அன்பு என்ற ஒன்றை நீ அடைய வேண்டுமானால் காதல் என்ற ஒன்றை நீ உணர வேண்டும்.
2. உன்னை பார்த்ததும் பேச நினைக்கும் என் உதடுகளின் ஏக்கத்தை விட மேன்மையானது என் மனதின் மௌன மொழிகள்.
3. உயிர் கூட சில நொடிகளில் என்னை விட்டு அகன்று விடும் ஆனால் உன் நினைவுகள் என்னை விட்டு மறையாது என்றுமே ஆறாத் தழும்பாக அலை பாய்கிறது என் உணர்வுகளில்.
4. என்னை உனக்காக மாற்றியதும் நீ தான் இன்று மனம் மாறி என்னை விட்டு பிரிந்து செல்வதும் நீ தான்
5. வேண்டாம் என்று தான் இருந்தேன் விரும்பி வந்து என்னை நீ விரும்ப வைத்தாய் இன்று ஏன்தான் உன்னை விரும்பினோமோ என்று என்னை புலம்ப வைக்கிறாய்
6. உனக்காக எதையும் இழக்கும் இதயம் இருக்கு என்னிடம் இதை தவிர வேறு என்ன எதிர்பார்க்கிறாய் இப்பெண்ணிடம்.
7. நிஜங்களில் நான் உன்னை விட்டு பிரிந்தாலும் என்றுமே உன் கண்களுக்கு மருந்தாகவும் உன் கனவுகளுக்கு உரியவனாகவும் இருப்பேன்
8. உனக்குள் என் நினைவு என்ற ஒன்று இருக்குமேயானால் பிரிவு என்ற ஒன்றினால் கூட நம்மை பிரிக்க முடியாது.
9. நீ மட்டுமே என் வாழ்க்கையின் கடந்து போன கல்வெட்டு, என் நிகழ்கால சிட்பம் , என் எதிர்காலத்தின் ஓவியம்.
10. நான் பல முறை பார்த்தால் தான் நீ ஒரு முறை பார்க்கிறாய் அந்த ஒரு முறையும் உன் வேண்டா வெறுப்பாக பார்க்கும் உன் பார்வைகளால் என்னை சுட்டெரித்து விடுகிறாய்.