நடுவானில் பயணிக்கும்போது கடவுச்சீட்டு(Passport) தொலைந்து விட்டால் என்ன செய்வது?
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து விதமான ஆவணங்களையுமே நாம் இலகுவில் டிஜிட்டல் வழியாக பெற்றுக்கொள்ள முடிகின்றது.
எனினும், இன்று வரையிலும் பௌதீக ரீதியாக காகித வடிவில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேவைப்பாடு உடைய ஓர் ஆவணமாக கடவுச்சீட்டை குறிப்பிட முடியும்.
திருட்டு அல்லது தொலைதல் போன்ற ஏதுக்களினால் உங்களது கடவுச்சீட்டு காணாவில்லை என்றால் என்ன செய்வது.
நடுவானில் கடவுச்சீட்டு தொலைந்தால்?
விமானத்தில் கடவுச்சீட்டு தொலைவது என்பது சாத்தியமற்ற விடயமாகவே பலருக்கு தென்படக்கூடும்.
எனினும் அவ்வாறு தொலைந்து விட்டால் அது சர்வதேச பயணமாக இருந்தால் கடவுச்சீட்டு இன்றி ஒரு நாட்டில் தரையிறங்க நேரிடும்.
தங்களது கடவுச்சீட்டு தொலைந்து விட்டது என தெரியாமலேயே நாடு ஒன்றில் தரையிறங்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வெளிநாடு ஒன்றில் வைத்து கடவுச்சீட்டு காணாமல் போனால் அல்லது சேதமடைந்தால் அது பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடும்.
என்ன செய்வது?
பொதுவாக இவ்வாறான பயணிகள் அருகாமையில் இருக்கும் தமது தூதரகங்களுக்குச் சென்று அவசர பயண ஆவணம் (Emergency Travel Document (ETD)) ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும்.
எனினும் விமான நிலைய பாதுகாப்பு கடவைகளை கடவுச்சீட்டு இன்றி உங்களினால் கடக்க முடியாது. இவ்வாறு கடவுச்சீட்டு இன்றி நாட்டுக்குள் பிரவேசித்தவர்கள் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
விமானத்தில் அல்லது பயணப் பொதியில் கடவுச்சீட்டு இருந்தால் அது குறித்து குடிவரவு அதிகாரிகளுக்கு விளக்கி அவர்களின் உதவியுடன் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறு கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டு பயணங்களை சிலர் தொடர்ந்துள்ளனர்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்
கடவுச்சீட்டை கண்டு பிடிக்க முடியாவிட்டால் சில காரணிகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பயணியின் குடியுரிமை, எந்த நாட்டில் வசிக்கின்றார் போன்ற காரணிகளின் கருத்திற்கொள்ளப்படும்.
அந்த நாட்டைச் சேர்ந்தவர் என்றால் சில ஆவணங்களை பூர்த்தி செய்து விட்டு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்.
எனினும் வெளிநாட்டுப் பிரஜைகள் என்றால் அவர்கள் உடன் அந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவர்.
நாடுகளின் அடிப்படையில் வேறுபடலாம்
நடுவானில் கடவுச்சீட்டு தொலைந்தால் பொதுவாக நாடுகளின் அடிப்படையிலும் பயணிகளின் குடியுரிமை அடிப்படையிலும் சில நடவடிக்கைகள் மாறுபடுகின்றது.
எனினும் பொதுவாக அவ்வாறு கடவுச்சீட்டு இன்றி நாடு ஒன்றின் விமான நிலையத்திற்குள் பிரவேசிப்போர் வந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவார் என்பதே பொதுவான நடைமுறையாகும்.
எனவே நீங்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக உங்கள் பயண ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து பேணுவது இவ்வாறான அசௌகரியங்களை தவிர்க்க வழியமைக்கும்.