லொஸ்லியாவா இது? உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக வெளியிட்ட புகைப்படம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டவர்தான் இலங்கைப் பெண் லொஸ்லியா.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதற்கு பிறகு, அவர் கதாநாயாகியாக நடித்து வெளிவந்த முதல் படம் ‘ப்ரெண்ட்ஷிப்’.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் லொஸ்லியா, ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், தற்போது பயங்கர ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.