தொப்பையை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த பானங்கள் மட்டும் போதும்
தொப்பையைக் குறைக்கும் பானங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தொப்பையால் அவதி
இன்று பெரும்பாலான நபர்களின் பிரச்சினையாக இருப்பது உடல் எடை மற்றும் தொப்பையே. இதனால் அவதிப்படும் மக்கள் குறைப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர்.
வயிற்றைச் சுற்றிலும், தசைகளுக்கு கீழ், உறுப்புகளை சுற்றி சேரும் கொழுப்பு மனிதர்களுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகின்றது.
ஆம் இதயநோயில் ஆரம்பித்து, நீரிழிவு நோய், புற்றுநோய், பக்கவாதம் என பல வியாதிகளில் கொண்டு விடுகின்றது. இதற்கான தீர்வு அளிக்கும் பானங்களைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கிரீன் டீ
எடையைக் குறைக்கும் பானங்களில் மிக முக்கியமாக கிரீன் டீ உதவி செய்கின்றது. இதனை உட்கொள்வதால், வயிற்றினைச் சுற்றி இருக்கும் கொழுப்புகள் கணிசமாக குறைகின்றது. மேலும் மூளை செயல்பா, சிறந்த சுவாசம், அதிக ஆற்றலை தருவதுடன், புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கின்றது. மாலையில் சாதாரண டீக்கு பதிலாக கிரீன் டீயை எடுத்துக்கொண்டால் நல்ல மாற்றத்தை அறியலாம்.
பிளாக் காபி
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிளாக் காபி குடிப்பது மிகவும் சிறந்தது. இவை உடலுக்கு உடனடி ஆற்றலை அழிப்பதுடன், வளர்சிதை மாற்ற செயல்முறையினையும் எளிமையாக்குகின்றது.
கலோரிகளையும் வேகமாக எரிப்பதால், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கவும். சர்க்கரை அதிகமாக சேர்த்தால் கலோரி அளவு அதிகமாகும்.
சீரக தண்ணீர்
சமையலறையில் மிக முக்கிய மருத்துவ பொருளாக இருக்கும் சீரகம், பசியைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பை கரைக்கவும் உதவுகின்றது. செரிமான பண்புகளை கொண்டுள்ள சீரகத்தினை, உடற்பயிற்சி முடிந்தவுடன் சீரகத்தண்ணீராக எடுத்துக்கொண்டால் நிச்சயம் எடை குறையும்.
பெருஞ்சீரகம் தண்ணீர்:
இதே போன்று பெருஞ்சீரக தண்ணீரும், நச்சுக்களை நீக்கவும், வளர்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்கின்றது. இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீரை பருக வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |