தொலைதூர உறவு தொலைந்துவிடுமோ என்று பயப்படுகிறீர்களா?
நம் வாழ்வில் உறவுகள் என்பது மிகவும் முக்கியமானது. அதுவும் ஒரு புதிய உறவு நமது வாழ்க்கையில் வந்து இணைகிறது என்றால், அதற்கு ஆணி வேராக இருப்பது வாக்குறுதிகள் தான்.
எந்தளவுக்கு நம்முடைய உறவுகளுடன் நாம் பயணிக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அனைத்தும் இருக்கிறது. காலப் போக்கில் இந்த உணர்வுகளில் மாற்றம் ஏற்படலாம்.
ஆனால் தொலைதூரத்தில் இருக்கும்போது இந்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற வேண்டும் என்ற கேள்விகள் எழும்பும்? இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் இணையுடன் நீங்கள் நிச்சயம் பேச வேண்டும்.
கணவன் மனைவி இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் தொலைவில் இருக்கும்போது நமது உறவை தொலைத்துவிட்டோம் என்ற அச்சம் ஏற்படும்.
அப்போது நமது துணைக்கு துரோகம் செய்யும் அளவுக்குக்கூட மனம் மாறக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. தொலைதூரத்திலிருந்து நீங்கள் உங்கள் இணைக்கு செய்யும் துரோகம் அந்த உறவில் பிரிவை ஏற்படுத்தும்.
உடல் மற்றும் உணர்வு ரீதியான தூரம் உங்களது இணையிடம் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.
எவ்வளவு தொலைவில் இருந்தாலும் உங்களது உறவில் பிரச்சினையில்லாமல், வெற்றியாக செல்ல வேண்டுமானால் உறவில் கவனமும், முயற்சியும் அவசியம் தேவை.
44 சதவீதம் உறவில் ஏற்படும் சலிப்பு, 42 சதவீதம் துணையின் கவனமின்மை, 38 சதவீதம் பாலியல் விடயத்தில அதிருப்தி அடைதல் போன்ற சில காரணங்கள் உறவுகளுக்கிடையே விரிசல் ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்பொழுதுமே உறவுகளுக்கிடையில் காதல், நெருக்கம், கவனம் போன்றவை அவசியம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற விடயங்களை மனதில் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக முயற்சித்தாலே உறவு நம்மை விட்டு தொலைந்துவிடுமோ? என்ற பயம் தேவையில்லை.