கூந்தல் கருகருவென வளர வேண்டுமா? இந்த ஒரு பொருள் செய்யும் அற்புதம்
இயற்கையாக தலைமுடியை கருப்பாக மாற்ற என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக அனைவரும் தங்களது தலைமுடியினை அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர்க்க அதிகமாகவே ஆசைப்படுவார்கள். இதற்காக பல தயாரிப்புகளை கடைகளில் வாங்கியும் ஏமாறுவதும் உண்டு.
ஆனால் இவ்வாறு கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துவதால், முடி மிகவும் பலவீனமாகவும், உயிரற்றதாகவும் காணப்படுகின்றது.
இந்நிலையில் நாம் வீட்டில் பயன்படுத்தப்படும் சில பொருட்களை வைத்தே தலைமுடியை கருப்பாக மாற்றமுடியும். அது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வெந்தயம்
முடி வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கும், பளபளபாக்க வைப்பதற்கு வெந்தயம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. மிகவும் குளிர்ச்சியான வெந்தயத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வெந்தயம் - தேவையான அளவு
மருதாணி தூள் - 1 தேக்கரண்டி
இண்டிகோ பவுடர் - 1 டீஸ்பூப்
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
மருதாணி தூள் மற்றும் இண்டிகோ பவுடர் இவற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு நீங்கள் எடுத்துக்கொண்ட வெந்தயத்தினை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்து வைத்திருக்கும் வெந்தயத்தினை மருதாணி, இண்டிகோ பவுடர் கலவையில் சேர்க்கவும். பின்பு இந்த கலவையில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து 2 மணிநேரம் கழித்து உச்சந்தலையில் தடவி, சிறிதுநேரம் காய்ந்த பின்பு குளிக்கவும். இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தாலே உங்கள் கூந்தல் கருப்பாக மாறிவிடும்.
இதனை நீங்கள் பயன்படுத்தும் முன்பு பேட்ச் டெஸ்ட் செய்துவிட்டு பயன்படுத்தவும்.