வரிசையில் நிற்கும் வேலை... வாயடைக்க வைத்த லண்டன் இளைஞரின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா?
லண்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் வரிசையில் நிற்பதையே பணியாக செய்து ஆயிரம் கணக்கில் வருமானம் ஈட்டும் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.
லண்டனை சேர்ந்த ஃப்ரெட்டி பெக்கிட் (Freddie Beckitt) 31 வயதான இளைஞர் கடந்த 3 ஆண்டுகளாக வரிசையில் நிற்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார்.
ஃபுல்ஹாம் பகுதியைச் சேர்ந்த இவர், பிரபல ஆங்கில பத்திரிக்கை பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, பெரும்பாலும் வரும் வாடிக்கையாளர்கள் வயதானவர்கள் மற்றும் கைக்குழந்தைகளை கொண்டவர்கள்.
இவர்களால் வெகுநேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்க முடியாது. ஆகவே அவர்களுக்காக நான் எவ்வளவு நேரம் ஆனாலும் வரிசையில் நின்று அதனை பெற்று அவர்களிடம் ஒப்படைப்பதே என்னுடைய வேலையாக உள்ளது.
குறிப்பாக பண்டிகை நாட்களில் வேலை செய்வற்காக சுமார் 3 மணிநேரம் முதல் 8 மணி நேரம் வரை வரிசையில் நின்றிருக்கிறேன். இந்த வேலைக்காக எந்த படிப்பும், தகுதி திறைமையும் எனக்கு தேவையில்லை.
ஒரு மணிநேரத்திற்கு 20 பவுண்ட் சம்பாதிக்கிறேன். நினைக்கும் நேரத்தில், எனக்கு தோன்றும் நாளில் பணியாற்றுவேன். மேலும், இதைப்பற்றி என் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கும் நான் செய்யும் இந்த வேலை காமெடியாக இருந்தாலும் என்னுடைய சம்பளம் அவர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது எனக்கூறியுள்ளார்.
மேலும், ஃப்ரெட்டி பெக்கிட்டிற்கு நாள் ஒன்றுக்கு 160 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் 16,000 ஆயிரம் ரூபாய் சம்பாரிக்கிறார். இவர் தன்னை professional queuer என்றே பெருமையாகவும் கூறிக் கொள்கிறார்.
இவர் செய்யும் இந்த வேலையும் அவ்வளவு எளிதானது அல்ல, லண்டனில் கடும் குளிர்காலத்தில் அவர் இந்த வேலை செய்ய வேண்டும். தினமும் கடுமையான சவால்களையு இவர் எதிர்கொள்கிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022