லாக்டவுனில் மட்டும் ஒரு மணிநேரத்திற்கு இத்தனை கோடியா? ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட தகவல்!
பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போம் அமைப்பு ஆனது ஊரடங்கால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த ஆய்வை வெளியிட்டது. அதில், இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் 100 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 822 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
இத்தொகையை தலா 94 ஆயிரம் ரூபாய் வீதம், 13.80 கோடி ஏழைகளுக்கு வழங்க முடியும். மேலும், மார்ச் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்திற்குள் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. மார்ச் 18 ஆம் தேதி 36.8 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்துமதிப்பு, தற்போது 78.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கையில் உலக செல்வந்தர் பட்டியலில் 21 ஆவது இடத்திலிருந்த அம்பானி, தற்போது 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும், லாக்டவுன் காலத்தில் மட்டும் முகேஷ் அம்பானி, ஒரு மணி நேரத்துக்கு ரூ.90 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.