கல்லீரலை ஆரோக்கியமான பாதுகாக்கும் கோங்குரா எள் பச்சடி செய்வது எப்படி?
நாம் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது அவசியம். நாம் ஆரோக்கியமான உணவை உண்ணும் போது தான் நமது உடல் பாகங்களும் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த உடல் பாகங்கள் நோய்வாய் படமல் இருக்கு அதற்கேற்ற உணவுகளை நாம் உண்ண வேண்டும். அந்த வகையில் தான் உடலின் மிகவும் முக்கியமான பகுதியான கல்லீரலை சுத்தம் செய்யும் பச்சடி ஒன்னின் செய்முறை பற்றி பார்க்க போகின்றோம்.
இது வீட்டிலேயே செய்யக்கூடிய மிகவும் ஒளிமையான ஒரு உணவு ரெசிபியாகும். இதை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- கோங்குரா - ஒரு கட்டு
- எள் - கால் கப்
- மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கருப்பு மிளகு - இரண்டு
- சீரகம் - அரை ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்து - ஒரு ஸ்பூன்
- நிலக்கடலை - ஒரு ஸ்பூன்
- எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- பூண்டு - ஐந்து பல்
- பச்சை மிளகாய் - பத்து
செய்யும் முறை
இதற்கு முதலில் கோங்குரா இலைகளை கழுவி தனியாக வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எள்ளு சேர்த்து நன்றாக வறுத்து தனியாக வைக்கவும். அதே பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பச்சை மிளகாயை வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின் அதை எடுத்து ஒதுக்கி வைக்க வேண்டும். அதே பாத்திரத்தில் மற்றொரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கோங்குரா சேர்த்து மெதுவாக வேகவிடவும். பின்னர் தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் அடுப்பை வைத்து வேக விடவும்.
பின்னர் பூண்டு சேர்த்து வதக்கவும். இதன் பின்னர் மிக்ஸி ஜாரில் கோங்குரா இலைகள், எள், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக அரைக்கவும்.
இதன் பின்னர் இன்னும் ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பு, சீரகம், கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். இதன் பின்னர் கிண்ணத்தில் உள்ள கோங்குரா கலவையின் மீது தாளிப்பை ஊற்றவும். அவ்வளவுதான், சுவையான கோங்குரா எள் பச்சடி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |