அப்பா... அம்மாவை பத்திரமா கூட்டிட்டு போங்க! லட்சக்கணக்கானோரின் இதயத்தை நொருக்கிய காட்சி
பள்ளிக்கு சென்ற சிறுவன் தன்னை கொண்டு வந்து விட்டுச்செல்லும் பெற்றோர்களிடம் கண்ணீர் மல்க பேசியுள்ள வார்த்தைகள் காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.
கண்களை குளமாக்கிய பாசம்
சமீப காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சிறு குழந்தைகளின் காணொளி என்றால் வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
இங்கும் அம்மாதிரியான காட்சி ஒன்றினைக் காணலாம். குறித்த காணொளியில் சிறுவன் பள்ளிக்கு செல்கின்றான். அவனை அவனது பெற்றோர்கள் வந்து விட்டுச் செல்கின்றனர்.
பள்ளி வகுப்பறையில் பெற்றோர்களுடன் வந்த சிறுவன் கண்ணீர் மல்க தனது தந்தையிடம்... அப்பா அம்மாவை பத்திரமா கூட்டிட்டு போங்கப்பா... என்று கூறி அழுதுள்ளார்.
பின்பு சிறுவனின் தந்தையும், "அப்பா அம்மா ரெண்டு பேரும் வந்து கூட்டிட்டு போறோம்" என கூறவே, கடைசியில் தனது தாய் அருகே மீண்டும் வந்த சிறுவன் அழ தொடங்குகிறார். இக்காட்சி காண்பவர்களின் இதயத்தை நொருக்கியுள்ளது.