உங்க துணை உண்மையில் யார்-ன்னு கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அவள் போரை அறிவிக்கிறாள்... ராக்காயி டைட்டில் போஸ்டருடன் நயன் போட்ட புதிய பதிவு... குவியும் லைக்குகள்
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. ஜன்னலில் எட்டிப் பார்க்கும் பெண்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது ஜன்னலில் இருந்து ஒரு பெண் எட்டிப்பார்ப்பது போன்று தெரிந்தால் நீங்கள் நம்பிக்கையானவர்களாகவும், அன்பானவர்களாகவும் இருப்பீர்கள்.
- திறந்த உள்ளம் கொண்ட நபர்களாக இருக்கும் நீங்கள் மனதில் பட்டத்தை பேசும் நபர்களாக இருப்பீர்கள்.
- உள் ஒன்று வைத்து வெளி ஒன்று பேசவதை விரும்பமாட்டீர்கள்.
- மற்றவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என உறுதியாக இருப்பீர்கள்.
- எப்போதும் கவனமாக இருக்க முயற்சி செய்வீர்கள். இது உங்களை மிகவும் இரக்கமுள்ளவராக காட்டுகிறது.
- உங்களின் துணையை சிறிதும் சந்தேகம் கொள்ளாமல் நம்பும் நபராக இருப்பீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களை சந்திப்பீர்கள்.
- நேர்மறையான கண்ணோட்டத்தைப் பேணுவதால் உங்களின் பாதுகாப்பு மேம்படும்.
- வாழ்க்கை வழங்கும் சிறுசிறு விஷயங்களால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
2. மண்டை ஓடு
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் உங்கள் கண்களுக்கு மண்டையோடு இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் யதார்த்தமான மனநிலையைக் கொண்டவர்களாக இருப்பீர்கள்.
- வாழ்க்கையின் குறைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வீர்கள்.
- சவால்களை அமைதியாக சமாளிக்க நபர்களாக இருப்பீர்கள்.
- நீங்கள் சில சமயங்களில் யதார்த்தமாக நடந்து கொள்வதால் மக்களால் ஒதுக்கி வைக்கப்படலாம்.
- நடக்கவிருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே கணிக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.
- எதிலும் சிறப்பான முடிவுகளை எடுக்க முயற்சி செய்வீர்கள்.
- மற்றவர்களின் நம்பிக்கையும் பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |