உதடு வெடித்து ரத்த கசிவா? அப்போ “இத” செய்து பாருங்க- 2 நாளில் பலன் நிச்சயம்
பொதுவாக காலநிலை மாற்றம் ஏற்படும் பொழுது உடலில் சிலருக்கு மாற்றங்கள் ஏற்படும்.
அதாவது சரும பிரச்சினைகள், காய்ச்சல், தலைமுடி உதிர்வு, செரிமான கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.
இந்த பிரச்சினைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவஸ்தைப்படும் பிரச்சினை தான் உதடு வெடிப்பு. இதனால் சரியாக சாப்பிடக்கூட முடியாமல் குழந்தைகள் அவஸ்தைப்படுவார்கள்.
இது காலநிலை மாற்றங்களின் போது தவறாமல் வரும் பிரச்சினைகளில் ஒன்று. குளிர் காலத்தில் பலருக்கும் அவஸ்தையை கொடுக்கும் உதடு வெடிப்பை எப்படி போக்கலாம் என யோசிப்பவர்களுக்கு சிறந்த மருத்துவம் உள்ளது. இது தொடர்பில் பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
உதடு வெடிப்புக்கான தீர்வுகள்
1. உதடு வெடிப்பு பிரச்சினைக்கு சிறந்த மருந்தாக தேன் பார்க்கப்படுகின்றது. தினசரி தூங்குவதற்கு முன்னர் உதடு வெடிப்பு உள்ள இடங்களுக்கு தேன் தடவி, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் உதடு வெடிப்பு பிரச்சினை சரியாகும்.
2. வீடுகளில் தேன் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். வெடிப்பு உள்ள இடங்களில் தேங்காய் எண்ணெயை தடவி மசாஜ் செய்து விட்டு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இதனால் உதட்டின் மேல் இருக்கும் வறட்சி நீங்கும்.
3. உதட்டில் காயம் உள்ளவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனின் உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாவிட்டாலும் உதடு காய்ந்து இருக்கும். உதட்டையும் உடலையும் ஈரழிப்பாக வைத்து கொள்ள நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
4. வீடுகளில் கற்றாழை வைத்திருப்பவர்கள் உதடுகளுக்கு கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வைத்து மசாஜ் செய்யலாம். இப்படி செய்து வந்தால் உதட்டில் இருக்கும் காயங்கள் மாறி, உதடு பார்ப்பதற்கு பஞ்சு போன்று காணப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |