வாத்துக்கு உதவ முயற்சிக்கும் சிங்கத்தின் சேட்டை! மில்லியன் நெஞ்சங்களை உருக வைத்த அழகிய காட்சி
நாம் பெரும்பாலும் சிங்கங்கள் மற்றும் புலிகளை வேட்டையாடும் ஒரு ஆபத்தான மிருகமாகவே பார்த்திருக்கிறோம். ஏனெனில் எப்போதும் அவை வேட்டையில் ஈடுபடும் மூர்க்கமான விலங்குகள் ஆகும்.
இருப்பினும், சமீபத்தில் இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ சிங்கங்கள் மேல் இருக்கும் நமது கருத்தை சற்றே மாற்றியுள்ளன.
How many of you had thought that such large carnivores has a soft heart?
— Susanta Nanda IFS (@susantananda3) March 25, 2021
They are wild. But not savages. Respect & adore them. They kill to survive & only when provoked. pic.twitter.com/RwoJ1z1Hjc
அதிகாரி நந்தா பகிர்ந்த அந்த அபிமான வீடியோ கிளிப்பில், ஒரு சிங்கம் குளத்தின் அருகே நடந்து செல்கிறது. அப்போது, அந்த குளத்தில் நீந்திக்கொண்டிருந்த ஒரு வாத்தை அன்பாகத் தட்டிக்கொடுப்பதை போல அந்த காட்சிகள் அமைந்துள்ளன.
தோற்றத்தை வைத்து பார்க்கும் போது சிங்கம் முரட்டு தனமாக தெரிந்தாலும், சிறிய பறவைக்கு உதவ முயற்சிப்பது போல தோன்றும் அந்த காட்சிகள் காண்போரின் நெஞ்சை உருக வைக்கிறது.