வெறும் இரண்டே நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்! எவ்வளவு தொரியுமா?
7 ஸ்கிரீன் ஸுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படம் கடந்த 10 ஆம் திகதி திரைக்கு வந்தது.
இந்நிலையில், வெறும் இரண்டு நாட்களில் Lik திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் விபரங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லவ் இன்சூரன்ஸ் கம்பேனி
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி.
பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். சீமான் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார்.கீ்ர்த்தி ஷெட்டி ,கெளரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார்கள்.அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் திரைக்கு வராமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 10 ஆம் திகதி வெளியானது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், Love Insurance Kompany திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூலை வாரிக்குரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |