கோடீஸ்வரர் ஆகணுமா? LICன் இந்த திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
மனிதனின் வாழ்க்கை நிச்சயமற்ற தன்மையுடையது இந்த நிலையில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பொருளாதார ரீதியில் பாதுகாப்பினை வழங்கும் நோக்கில் காப்புறுதி அல்லது முதலீட்டு திட்டங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் இன்றியமையாதது.
அந்த வகையில் இந்தியாவின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசீ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கின்றது.
எல்ஐசீயின் புதிய எண்டோமன்ட் திட்டம்
எல்ஐ.சீ நிறுவனத்தின் புதிய எண்டோமன்ட் திட்டமானது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு ஆகிய இரண்டு கவர்ச்சிகரமான அம்சங்களையும் கொண்டமைந்த ஒர் ஒரு பங்கேற்புடன் இணைக்கப்படாத திட்டமாகும்.
இந்த கலவையின் ஊடாக காப்பீடு செய்தவர் உயிரிழக்கும் சந்தர்ப்பத்தில் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்படுகின்றது.
இது முதிர்ச்சி முன்னதாக எந்த நேரத்திலும் கிடைக்கும். காப்பீடு செய்தவர் முதிர்ச்சிக்காலம் வரையில் உயிரோடு இருந்தால் பெருந்தொகை பணம் கிடைக்கப்பெறும்.
புதிய எண்டோமன்ட் திட்டத்தின் சிறப்பு
- முதலீடு செய்வதற்கு, 8 வயதுக்கு முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மெச்சூரிட்டி காலம் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 35 ஆண்டுகள்
இறப்பு போதான நலன்கள்
பாலிசி எடுத்துக் கொண்ட காலத்தில் காப்பீடு செய்தவர் உயிரிழந்தால் "Sum Assured on Death" என பாலிசியில் குறிப்பிடப்படும் தொகை வழங்கப்படுவதுடன் மரபுரீதியான போனஸ் மற்றும் இறுதி போனஸ் தொகையும் சேர்த்து வழங்கப்படுகின்றது.
வருடாந்த கட்டணத்தின் பத்து மடங்கு அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட உயர் தொகை இழப்பீடாக வழங்கப்படுகின்றது.
இந்த இறப்பு கொடுப்பனவு நலன் தொகையானது 105 வீதத்தை விடவும் குறையாது.
முதிர்வு நலன்
உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை மொத்த தொகையுடன் தவணைக்கான போனஸ் மற்றும் இறுதி போனஸ் ஏதேனும் கொடுக்கப்பட வேண்டியிருந்தால் அவையும் சேர்த்து முழுமையான தொகை வழங்கப்படும்.
தவணைக் காலம் பூர்த்தியானதன் பின்னர் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். எனினும், தவணைக் கொடுப்பனவுகள் பூரணமாக செலுத்தியிருக்க வேண்டும்.
லாபத்தில் பங்களிப்பு
எல்ஐசீ கார்பிரேஷனின் அனைத்து லாபங்களிலும் ஒவ்வொரு பாலிசிக்கும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மரபு ரீதியான போனஸ் மற்றும் இறுதி போனஸ் கொடுப்பனவுகள் ஏதேனும் இந்த பாலிசிக்கு உரியது என்றால் அவையும் சேர்த்து வழங்கப்படும்.
முதிர்வு அல்லது இறக்கும் ஆண்டின் அடிப்படையில் இறுதி அல்லது மேலதிக போனஸ் தொகை சேர்க்கப்படுகின்றது.
விபத்து மரணம் அல்லது முடமை நலன்கள்
எல்ஐசீ நிறுவனத்தினால் வழங்கப்படும் பாலிசிகளில் இந்த விபத்து மரணம் அல்லது முடமை தொடர்பான அம்சங்களையும் சேர்த்துக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உண்டு.
இதன் மூலம் திடீர் விபத்தினால் ஏற்படக்கூடிய மரணங்கள் மற்றும் உடல் ஊனங்களுக்கு ஒரு தொகை கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
உதாரணத்திற்கு,
உங்களது வயது 25 என்பதாக இருந்தால், காப்பீட்டு தொகை ரூ.22 லட்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இதன் அதிகபட்சம் 35 ஆண்டுகள் என தேர்வு செய்தால், மாதந்தோறும் 5087 செலுத்த வேண்டும்.
2ம் ஆண்டு முதல் மாதந்தோறும் ரூ.4978 செலுத்தவும், முடிவில் நீங்கள் சுமார் 1,07,25,000 ரூபாயை பெறுவீர்கள்.