எலுமிச்சை பழம் ஒரு மாதம் வரை காயாமல் இருக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தால் போதும்
கோடை காலத்தில் எலுமிச்சை பழம் ஒரு மாதம் ஆனாலும் காயாமல் இருப்பதற்கு நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகளைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
எலுமிச்சை
வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் அடங்கியிருக்கும் எலுமிச்சை பழமானது உடம்பிற்கு ஆற்றலை அளிக்கின்றது. மேலும் அதிக சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
வெயில் காலங்களில் எலுமிச்சை பழத்தை அதிகமாக நாம் பயன்படுத்துகின்றோம். உடம்பில் நீர்ச்சத்தை தக்க வைப்பதற்கு, உடனடியான ஆற்றலை வழங்கவும் செய்கின்றது.
தற்போது கோடை காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில், எலுமிச்சை பழத்தினை ஒரு மாதம் வரை காயாமல் வைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய சில வழிமுறையை தெரிந்து கொள்ளலாம்.

எலுமிச்சையை எவ்வாறு வாங்குவது?
எலுமிச்சை பழத்தினை வாங்கும் போது நன்கு ப்ரஷ்ஷான பழமாக இருக்குமாறு வாங்க வேண்டும்.
பின்பு எலுமிச்சை பழத்தின் தோல் மீது காயங்கள், புள்ளி புள்ளியாக இருந்தால் அதை வாங்கக் கூடாது.
அதிகமான எலுமிச்சை பழத்தினை வாங்கும் பாதி பழம் நன்றாக பழுத்ததாகவும், மீதி பழம் அரை பதத்திலும் இருக்குமாறு வாங்கவும்.
அனைத்தும் பழுத்த பழமாக வாங்கினால் சீக்கிமாக கெட்டுப் போய்விடும். இந்நிலையில் நாம் வாங்கியுள்ள பழம் ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான டிப்ஸை காணலாம்.

எப்படி சேமித்து வைப்பது?
எலுமிச்சை பழத்தினை கடையிலோ, சந்தையிலோ வாங்கி வந்த உடனே அப்படியே கவரில் போட்டு ப்ரிட்ஜில் வைப்பது கூடாது.
ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு முன்பு அகலமான பாத்திரம் ஒன்றில் தண்ணீர் சேர்த்து கைப்பிடி அளவு கல்உப்பு போட்டு அந்த தண்ணீரில் எலுமிச்சையை 10 நிமிடம் ஊற வைத்து கழுவவும். இதனால் பழத்தின் மீதுள்ள பூச்சிக்கொல்லி, கிருமிகள் அழியும்.
கழுவி உடனே ஈரத்துடன் பழத்தினை ஸ்டோர் செய்யாமல் சுத்தமான காட்டன் துணியைக் கொண்டு ஈரமில்லாமல் நன்கு துடைத்து வைக்கவும்.

எலுமிச்சை பழம் விரைவில் அழுகி போகாமல் இருப்பதற்கு சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவற்றில் ஒன்றை பழத்தின் மீது நன்றாக தடவி, காற்று செல்லாத டப்பாவில் அடைத்து ப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யவும்.
டப்பாவில் போடும் முன்பு ஒரு நியூஸ் பேப்பரை அடியில் போட்டு பழத்தினை ஸ்டோர் செய்யவும்.
அப்படி இலையெனில் ஒவ்வொரு எலுமிச்சையும் ஒவ்வொரு டிஸ்யூ பேப்பரில் பந்து போல் சுருட்டி கொண்டு பின்பு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்யலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |