Belly Fat: எலுமிச்சையுடன் இந்த 3 பொருள் போதும்... தொப்பை கடகடவென குறையும்
இன்றைய சமூகத்தில் பெரும்பாலான நபர்கள் அனுபவிக்கும் பிரச்சினை தொப்பை ஆகும். இதனை மிகவும் எளிதாக குறைக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
நமது உடம்பில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் வயிற்றில் சேரும் போது தொப்பையாக மாறிவிடுகின்றது. ஆனால் இதனை எலுமிச்சையைக் கொண்டு சரிசெய்யலாமாம்.
எலுமிச்சை சாறு தொப்பையை குறைக்குமா?
நீங்கள் தொப்பையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால் எலுமிச்சை சாறை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின், நார்ச்சத்து ஆகியவை இருப்பதால் உடம்பில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகின்றது.
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதுடன், இது வளர்சிதை மாற்றத்திற்கு முக்கியமாக இருக்கின்றது. இதில் இருக்கும் குறைவான கலோரி உடல் எடையை குறைக்க உதவும்.
எலுமிச்சை சாறின் அல்கலைசிங் விளைவு சிறிது கார pH ஐ பராமரிக்க உதவுவதுடன், செரிமான பிரச்சினையை மேம்படுத்தவும் செய்கின்றது. எலுமிச்சையையுடன் சில பொருட்களை சேர்த்துக் கொண்டால் விரைவில் பலனை எதிர்பார்க்கலாம்.
எலுமிச்சையுடன் எதையெல்லாம் சேர்க்கலாம்?
எலுமிச்சை சாறுடன் ஊற வைத்த சியா விதைகளை சேர்ப்பதால் நார்ச்சத்து அதிகமாகின்றது. இவை சர்க்கரை அளவை கட்டப்படுத்தி செரிமானத்தையும் அதிகரிப்பதால் உடல் எடையை இழக்க உதவுகின்றது.
எலுமிச்சை சாறுடன் அரைத்த பச்சை மஞ்சளை சேர்ப்பது வளர்சிதை மாற்ற விகிதத்தை விரைவுபடுத்த உதவுவதோடு சிறந்த எடை இழப்புக்கும் உதவும். மஞ்சளில் உள்ள குர்குமின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு உள்ளதால், இவை உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு திரட்சியுடன் தொடர்புள்ள நாள்பட்ட வீக்கத்தையும் குறைக்கின்றது.
பச்சை மஞ்சள், கருப்பு மிளகு மற்றும் வெந்நீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து தொப்பை கொழுப்பை கரைக்க உதவுகிறது.
எலுமிச்சை நீரில் இஞ்சியைச் சேர்த்து பருகினால் தொப்பை கொழுப்பை வேகமாக எரிக்க உதவுவதுடன், வீக்கத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |