கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை போட்டு வைத்தால் என்ன பலன் தெரியுமா?
ஒவ்வொரு நாளும் மனிதர்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக போராடி வருகிறார்கள்.
இதற்காக பலவிதமான பரிகாரங்களும், பூஜைகளும் செய்து வருகிறார்கள். அதில் ஒன்று தான் எலுமிச்சை பழத்தை டம்பளர் போட்டு வைப்பது. இப்படி வீடு மற்றும் வியாபார இடத்தில் செய்து வைத்தால் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.
இவற்றை தாண்டி வேறு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பலன்கள்
1. பொதுவாக எலுமிச்சைப்பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. இவை வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது என்பதால் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
2. ஆன்மீக ரீதியாக பார்க்கும் பொழுது எலுமிச்சைப்பழத்திற்கு சுற்றியுள்ள எதிர்மறையான ஆற்றலை நேர்மறையான ஆற்றலாக மாற்றும் திறன் உள்ளது.
3. இவ்வளவு ஆற்றல்களை கொண்டிருக்கும் எலுமிச்சைப்பழத்தை உள்ளே வைத்திருக்கும் தண்ணீரானது தன்னைச் சுற்றி உள்ள ஆற்றலுக்கு தகுந்தாற்போல் மாறும் தன்மை கொண்டது. சில கோவில்களில் இந்த நீரை தீர்த்தமாகவும் கொடுக்கிறார்கள். இன்னும் சிலர் இந்த நீரை வைத்து மற்றவர்களை சபிக்கும் வேலையை பார்க்கிறார்கள்.
4. எலுமிச்சம் பழத்தை ஒரு இடத்தில் வைக்கும் பொழுது அந்த இடத்தில் உள்ள தீய எண்ணங்களையும், கண் திருஷ்டிகளையும் இல்லாமலாக்கி, நேர்மறையான ஆற்றல்களை கொடுக்கும்.
5. ஒருவர், தீய எண்ணத்தோடு நம் வீட்டிற்குகோ அல்லது வியாபார இடத்திற்கோ வரும் பொழுது அந்த எண்ணங்களை மாற்றக்கூடிய சக்தி கூட இந்த கண்ணாடி கிளாசில் இருக்கும் எலுமிச்சைக்கு உள்ளது.
வைக்கும் முறை
கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையை போடும் நாள் வெள்ளிக்கிழமையாக இருக்க வேண்டும். தண்ணீரை ஒரு வாரம் வரை வைத்திருந்து மாத்தலாம்.
அந்த பழைய தண்ணீரை கொட்டும் பொழுது மற்றவர்களின் கால்கள் படாத இடத்தில் கொட்டிவிட்டு புதிய தண்ணீரில் எலுமிச்சையை போட்டு வைப்பது அவசியம். இதனால் உங்கள் கடைகளில் இருக்கும் கண்திருஷ்டி கழியும். வியாபாரம் விருத்தியும், பொருளாதாரத்தில் முன்னேற்றமும் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).