லெமன் ஜுஸ் குடிச்சிருப்பீங்க! லெமன் இடியாப்பம் கேள்விப்பட்டதுண்டா?
பொதுவாகவே எலுமிச்சை சாறுக்கு தனி சுவை உண்டு. புளிப்பு சுவையுடைய எலுமிச்சையை எந்த ஒரு உணவில் சேர்த்துக் கொண்டாலும் அது சுவையை கூட்டிவிடும். இப்போது இந்த சமையல் குறிப்பில் லெமன் இடியாப்பம் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இடியாப்பம் - 1 கப்
எலுமிச்சை - 1/2
வெங்காயம் - 1
கருப்பு உளுந்து - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
முந்திரி - 10
கறிவேப்பிலை - 10
செய்முறை
முதலில் இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உளுந்து, கடுகு, நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை என்பவற்றை சிறிது நேரம் வறுத்தெடுக்கவும்.
அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். இறுதியாக கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
சூப்பரான லெமன் இடியப்பம் தயார்.