வீடே மணக்கும் லெமன் கிராஸ் ரசம் - எப்படி செய்யணும்... ரெசிபி இதோ
உடலுக்குஆரோக்கியத்தை அள்ளி தரும் லெமன் கிராஸ் ரசம் எப்படி மணமணக்க செய்ய வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

லெமன் கிராஸ் ரசம்
ரசம் ஆரோக்கியம் மிகுந்த ஒரு உணவு. இது உடலுக்கு பல நன்மைகளை தரும். ரசத்தில் பல மூலிகை பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து செய்வார்கள்.
காய்ச்சல், சளி இருமல் போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்படும் போது ரசம் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும்.
மிளகு ரசம், தக்காளி ரசம், தேங்காய் பால் ரசம் போன்ற ரசங்களை சாப்பிட்டு இருப்போம். ஆனால் வித்தியாசமாக லெமன் கிராஸ் ரசத்தை குடித்தால் அது உடலுக்கு பல நன்மைகளை தரும். இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- லெமன் கிராஸ்,
- தேங்காய்,
- புளி,
- பூண்டு,
- சீரகம்,
- மிளகு,
- கடுகு,
- மிளகாய் தூள்,
- பெருங்காயப்பொடி,
- மஞ்சள் தூள்,
- உப்பு,
- சின்ன வெங்காயம்,
- பச்சை மிளகாய்,
- சின்ன வெங்காயம்,
- கொத்தமல்லி.

செய்முறை
ரசம் செய்ய தேங்காய் உடைத்து எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதன் பாலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் லெமன் கிராஸ், பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை இடித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் புளி எடுத்து கரைத்து வைத்துக் கொண்டு, நறுக்கி தக்காளி, பெருங்காயப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொண்டு அதில் புளியை கரைத்து நீரை ஊற்றி தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் உப்பு உப்பு நன்றாக கரைய வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து, கடுகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், இடித்து வைத்த லெமன் கிராஸ் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
பின்னர் புளி மற்றும் தேங்காய் பால் கலந்து வைத்ததை இதில் சேர்த்து கொண்டு மேலும் கொஞ்சம் தேங்காய் பால் ஊற்றி வைத்து மூன்று நிமிடம் கொதிக்க விட்டு கொதித்த பின் கொத்தமல்லி சேர்த்தால் சேர்த்து இறக்கினால் ரசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |