இஞ்சி எலுமிச்சை ரசம் “இப்படி” வைச்சா குழம்புமே தேவைப்படாது.. அவ்வளவு சுவையாக இருக்குமாம்..
இந்திய உணவுகளில் ரசம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
எவ்வளவு பெரிய விருந்து சாப்பிட்டாலும் ரசத்துடன் விருந்தை முடிப்பது தான் இந்தியர்களின் வழக்கமாக உள்ளது.
ரசம் சுவையானதாக இருப்பதுடன் கடினமான உணவுகளை எளிதில் செரிமானம் அடையவும் செய்கிறது.
ரசம் வைக்கும் பொழுது அதில் தக்காளி பழத்தை பெரும்பாலும் சேர்ப்பார்கள். இது புளிப்பு மற்றும் இனிப்பு சுவையை தருகிறது. ஆனால் ரசத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. சில ரச வகைகள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அப்படிப்பட்ட தனித்துவமான மற்றும் ஆரோக்கியமான ரச வகைகளில் ஒன்று தான் இஞ்சி எலுமிச்சை ரசம். இது செரிமானத்தை சீர்ப்படுத்தி, வயிறு தொடர்பான பிரச்சினைகளை சரிச் செய்கிறது.
அந்த வகையில், இஞ்சி எலுமிச்சை ரசம் எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்: -
- தக்காளி - 1 - நறுக்கிய
- இஞ்சி - 1 துண்டு
- பச்சை மிளகாய் - 4
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி - சிறிதளவு
- மஞ்சள் - அரை ஸ்பூன்
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
- வேகவைத்த துவரம் பருப்பு - அரை கப்
- எலுமிச்சை - அரை பழம்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- நெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
ரசம் வைப்பது எப்படி?
ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில், தக்காளி, இஞ்சி, மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மஞ்சள் தண்ணீருடன் கலக்கவும்.
சில நிமிடங்கள் இந்த நீரை அடுப்பில் வைத்து தக்காளி மென்மையாகும் வரை கொதிக்க வைக்கவும்.
பின்னர் ஒரு கரண்டியை வைத்து தக்காளியை நன்றாக பிசைந்து விட்டு, வேக வைத்த துவரம்பருப்பை அதில் சேர்க்கவும்.
துவரம்பருப்பு வெந்தவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சரியாக 3 நிமிடங்கள் வரை ரசத்தை கொதிக்க விடவும்.
கொதி வந்து கொண்டிருக்கும் பொழுது அதில் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
இறுதியாக தாளிக்க தேவையான பொருட்களை போட்டு தாளித்து ஊற்றி இறக்கினால் காரசாரமான ரசம் தயார்.
ஆரோக்கியம் பொருந்திய ரசத்தை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் குணமடையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |