கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்கும் லெமன் காபி - 5 நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்
எடை அதிகரிப்பு என்பது மிக பெரிய வியாதியாக உருவெடுத்துள்ளது. அதனால் அதற்கான முயற்சியில் பலரும் பல விடயங்களை நாடி கொண்டிருக்கின்றனர்.
ஆரோக்கியமான உணவு முறையில் நாம் அக்கரை செலுத்தினாலே நல்ல மாற்றத்தினை எதிர்ப்பார்க்கலாம்.
பிளாக் காபியில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதன் மூலமாக உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாக குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லெமன் மற்றும் காஃபைன் இரண்டுக்குமே எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் சக்தி வாய்ந்த உணவு பொருள்.
கொழுப்பை குறைக்கும் தன்மை இரண்டுக்கும் உண்டு. அதனால் லெமன் காபி குடிக்கும்போது கொழுப்பு கரையும்.
லெமன் காபி தயாரிக்கும் முறை
தேவையான பொருள்கள்
- காபி பவுடர் - அரை ஸ்பூன்
- வெந்நீர் - 1 கப்
- எலுமிச்சை பழம் - பாதியளவு
செய்முறை
ஒரு கப்பில் அரை எலுமிச்சை பழத்தின் சாறினை பிழிந்து கொள்ளுங்கள்.
அதனுடன் அரை ஸ்பூன் காபி பவுடரை சேர்த்து அதில் கொதிக்க வைத்த நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் லெமன் காபி ரெடி.
எச்சரிக்கை
ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் வரை எடுத்துக் கொள்ளலாம்.
அதற்கு மேல் வேண்டாம்.
இதுமட்டுமே ஒட்டுமொத்த கொழுப்பையும் கரைத்து விடும் என்று உடற்பயிற்சியில் ஈடுப்படமால் ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்தால் மாறாக விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை துளியும் மறக்க வேண்டாம்.