சோம்பேறி ரெசிபி: 2 முட்டையும் ஒரு கப் சாதமும் இருந்தால் போதும்

Healthy Food Recipes
By Pavi Feb 24, 2026 12:40 AM GMT
Report

வாரத்தில் ஆறு நாட்களும் வேலை செய்து விட்டு வீட்டில் ஒரு நாள் இருப்போம். அப்போது நமககு யாராவது காரசாரமாக சமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருப்போம்.

தற்போது சமைக்க சோம்பேறியாக அல்லது நேரமில்லை ஆனால் காரசாரமாக சாப்பிட வேண்டும் என்றால் இந்த ரெசிபி உதவும். இதன் பெயர் எக் பெப்பர் ரைஸ் சிறந்த தேர்வு.

வெறும் 5 நிமிடங்களில் செய்யக்கூடிய இது, சுவையால் அனைவரையும் கவரும். பேச்சுலர்களுக்கும் காலை அவசர நேரம் உள்ளவர்களுக்கும் இது பக்கா லஞ்ச் ஐடியாவாக இருக்கும்.

இந்த ரெசிபி செய்வதற்கு 2 முட்டை மற்றும் சாதம் இருந்தால் போதும். மிகவும் எளிமையாக செய்து விடலாம். இது எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சோம்பேறி ரெசிபி: 2 முட்டையும் ஒரு கப் சாதமும் இருந்தால் போதும் | Lazy Recipe 2 Eggs And A Cup Of Rice

 தேவையான பொருட்கள்

  1. எண்ணெய்
  2. வெங்காயம்
  3. பீன்ஸ்
  4. கேரட்
  5. பச்சை மிளகாய்
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட்
  7. உப்பு
  8. மிளகுத்தூள்
  9. கரம் மசாலா
  10. முட்டை - 2
  11. வடித்த சாதம்
  12. கொத்தமல்லி

சோம்பேறி ரெசிபி: 2 முட்டையும் ஒரு கப் சாதமும் இருந்தால் போதும் | Lazy Recipe 2 Eggs And A Cup Of Rice

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அது நன்றாக மங்கலான நிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை மிளகாய்கள் சேர்க்கவும்.

2–3 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி வதக்கவும்.இப்போது 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, அதன் பச்சை வாசனை போய்விடும் வரை வதக்கவும்.

இது சுமார் 1 நிமிடம் ஆகும். பிறகு தேவையான உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் 1/4 டீஸ்பூன் கரம் மசாலாவை சேர்க்கவும். கிளறி, மசாலா நன்கு கலந்து வாசனை வரும் வரை வதக்கவும்.

சோம்பேறி ரெசிபி: 2 முட்டையும் ஒரு கப் சாதமும் இருந்தால் போதும் | Lazy Recipe 2 Eggs And A Cup Of Rice

இப்போது 2 முட்டைகளை உடைத்து நேரடியாக கடாயில் ஊற்றவும். உடனே கிளறத் தொடங்கி, முட்டை சுமார் 80% வரை வேகும் வரை வதக்க வேண்டும்.

முட்டை அதிகமாக வறுக்க வேண்டாம்  சாஃப்ட் இருக்கட்டும். முட்டை சமைந்ததும், அதில் வடிகட்டிய வெந்த சாதத்தை சேர்க்கவும்.

சாதமும் மசாலாவும் நன்கு கலக்கும் வரை மெதுவாக கிளறவும். 1–2 நிமிடங்கள் சுட வைத்து கலக்கவும்.கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி தூவி, இறக்கவும்.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW                 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US