சிரிப்புதான் முகத்திற்கு அழகு: காதல் திரைப்பட நடிகையின் அழகு இரகசியம்!
தமிழில் 'காதல்' படத்தில் நடிகை சந்தியாவிற்கு தோழியாக நடித்து பிரபலமான, சரண்யா நாக் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார்.
பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பாலாஜி சக்திவேலிடம் அறிமுகப்படுத்த, காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சரண்யாவிற்கு கிடைத்தது.
முதல் படமான 'காதல்' படத்தில் சரண்யா நாக் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் அவரது கதாபாத்திரம், சந்தியா கதாபாத்திரத்திற்கு நிகராக நல்ல விமர்சனங்களை பெற்றது.
மேலும் சில ஆண்டுகளுக்கு பிறகு பேராண்மை படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சிரிப்புதான் அழகு
சரண்யா நாக் முகத்திற்கு எப்போது சிரிப்புதான் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் பேசியதாவது, வாழ்க்கையிலேயே சிரிப்புதான் எனக்கு சூனியம் என நான் நினைத்ததுண்டு. ஆனால் சிரித்துக் கொண்டே இருந்தால் தான் முகம் பளபளப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
எனக்கு பல பல கஷ்டங்கள் வந்தாலும் யாரிடமாவது சொன்னால் என் முகத்தைப் பார்த்துவிட்டு உனக்கு பிரச்சினையா என்று கேட்பார்கள்.
எனக்கு எப்போதும் என் சிரிப்புதான் அழகு கொடுக்கிறது. மற்றதெல்லாம் வெறும் போலியாகவே இருக்கும்.
நாம் எவ்வளவுதான் நம்மை அழகுப்படுத்திக் கொண்டாலும் சிரிப்பு மாத்திரமே அழகு கொடுக்கும் என பேசியுள்ளார்.