நடிகர் விஷால் படப்பிடிப்பில் பலத்த காயம் - துடிதுடித்து விழுந்ததால் படக்குழுவினர்கள் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால், வீரமே வாகை சூடும் படத்திற்கு பிறகு லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். வினோத் குமார் படத்தை இயக்குகிறார்.
பலத்த காயம்
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில், விஷால் போலீசாக நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது,
அப்போது நடிகர் விஷால் 100 ரவுடிகள் சேர்ந்து தாக்கும் காட்சியில் அவருக்கு நிஜமாகவே காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், விஷால் கீழே விழுந்து துடிதுடிக்க, படக்குழுவினர்கள் சூழ்ந்தனர், அவரால் நடக்க முடியாத நிலையில், உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.