மறைந்த சரத்பாபுவின் இரண்டு மனைவிகள் யார் தெரியுமா? வெளியான பல ரகசியம்
மறைந்த பிரபல நடிகர் சரத்பாபுவின் இரண்டு மனைவிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சரத்பாபு
நடிகர் சரத்பாபு கடந்த 1971ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகமானார்.
ஆந்திராவில் பிறந்த இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகராக வலம் வந்த நிலையில், 230க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
அதிலும் ரஜினியுடன் முத்து, அண்ணாமலை படங்களில் நடித்தது தற்போது வரை ரசிகர்களால் பேசப்படுகின்றது. இந்நிலையில் தற்போது 71 வயதாகும் நடிகர் சரத்பாபு செப்சிஸ் எனும் செப்டிசீமியா நோய் பாதிப்பினால் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது இறப்பு ரசிகர்கள், பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் இறுதி அஞ்சலிக்கு மும்பையிலிருந்து அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சரத்பாபுவின் திருமணம்
நடிகர் சரத் பாபு, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த பிரபல நடிகையான ரமா பிரபாவை 1971ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 17 வருட வாழ்க்கைக்கு பின்பு அதாவது 1988ல் விவாகரத்து செய்து கொண்டனர்.
பின்பு, எம்.என் நம்பியாரின் மகள் சினேகலதா தீட்சித் என்பவரை நடிகர் சரத்பாபு திருமணம் 1990ல் திருமணம் செய்த நிலையில் இந்த ஜோடிகளும் 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ஆனால் இறப்பதற்கு முன்பு தனது திருமணம் குறித்து பேசிய சரத்பாபு தான் முதலில் திருமணம் செய்தது ஸ்னேகலதாவை தான் என்று கூறியிருந்தார்.
ஆனால் ரமா பிரபா என்பவரை தான் திருமணம் செய்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவே இல்லை.” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.