உலகின் முதல் பணக்காரர் யார் தெரியுமா?
உலகின் பணக்கார பட்டியலில் ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் முதலிடம் பிடித்துள்ளார்.
எலான் மஸ்க்கை முந்திய லேரி எலிசன்
உலகின் முதல் பணக்காரராக கருதப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கை ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் முந்தியுள்ளார்.
சமீபத்தில் ஆரக்கிள் நிறுவனத்தின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
World's Richest People (Bloomberg)
— Morning Brew ☕️ (@MorningBrew) September 10, 2025
1. Larry Ellison $393 billion
2. Elon Musk $385 billion
3. Mark Zuckerberg $269 billion
4. Jeff Bezos $258 billion
5. Larry Page $210 billion pic.twitter.com/cCIKMYR1IP
லேரி எலிசனின் சொத்துக்கள்
ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின் படி, லேரி எலிசனின் சொத்துக்கள் தற்போது 393 பில்லியன் டொலர்களை தொட்டுள்ளது.
ஆரக்கிள் நிறுவனத்தின் பங்குகளில் 41% லேரி எலிசன் வைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் இந்த பங்குகளின் விலைகள் 43% உயர்ந்ததை அடுத்து லேரி எலிசன் இந்த உச்சத்தை அடைந்துள்ளார்.
சமீபத்திய பங்கு உயர்வு மூலம் மட்டும் லேரி எலிசன் 101 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளார்.
எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 385 பில்லியன் அமெரிக்க டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.