பாரம்பரியத்தை போற்றும் லங்காசிறியின் நம்மவர் பொங்கல் விழா - LIVE
இலங்கையில், உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு, கொழும்பு நகரில் "நம்மவர் பொங்கல் 2026” எனும் பாரம்பரிய விழா நடைபெற்று வருகின்றது.
தமிழர் திருநாளான தைப்பொங்கலை சிறப்பிக்கும் வகையில், IDM தனியார் பல்கலைக்கழகத்தின் அனுசரணையில், லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடகங்கள் இணைந்து நடத்தும் “நம்மவர் பொங்கல் விழா” இன்று(15.01.2026)தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானத்தில் வெகுசிறப்பாக அறங்கேறிவருகின்றது.
பாரம்பரிய நிகழ்வுகளுடன்,உற்சாகமான கொண்டாட்டங்களும் நிறைந்த வகையில், ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில், பொங்கல் பொங்கும் போட்டி, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், இசை மற்றும் நடன நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்று விழாவை மேலும் சிறப்பிக்கவுள்ளன.
இந்த நிகழ்விற்கு இணை அனுசரணையாளர்களாக FADNA மற்றும் Little Lion நிறுவனங்கள் எம்முடன் இணைந்து விழாவை அலங்கரிக்கவுள்ளனர்.
மேலும், இப்போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுவோருக்கு பணப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |