8 வயதில் தந்தையால் பலமுறை துன்புறுத்தப்பட்டேன்: ஷாக்கான தகவலைப் பகிர்ந்த குஷ்பு
எட்டு வயதில் என் சொந்த அப்பாவால் பாலியல் ரீதியான துன்புறுத்தப்பட்டதாக நடிகை குஷ்பு பேட்டி ஒன்றில் அதிர்ச்சியான தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.
நடிகை குஷ்பு
90களில் தமிழ் சினிமாவில் தன் ஆட்சியை கொடி கட்டி பறக்க விட்டவர் தான் குஷ்பு.
இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. தனது அம்சமான முகத்தால் அனைவரையும் கவர்ந்தவர் தான் இவர்.
மேலும் இவருக்காக கோயில் கட்டும் அளவிற்கு இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. இவர் மூன்று தலைமுறையாக நடித்துக் கொண்டிருக்கிறார், நடிப்பில் மட்டும் அல்ல, தொழில் முனைவர், தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட குஷ்பு அரசியலையும் விட்டு வைக்காமல் அந்தப் பக்கமும் சென்று இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு அதிக உடல் எடையைக் கொண்டிருந்த குஷ்பு கொரோனா ஊடரங்கிற்கு பிறகு உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய குஷ்புவாக இன்னும் அழகாக மாறிவிட்டார்.
மேலும், இவர் கடந்த வாரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். அப்போதுதான் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவருடன் உரையாடலில் ஈடுபட்ட போது சில அதிர்ச்சியான விடயங்களை பகிர்ந்திருக்கிறார்.
தந்தையால் பாலியல் துன்புறுத்தல்
இந்நிலையில் பேட்டியொன்றில் தன் தந்தை 8 வயதில் இருந்து பாலியல் சீண்டல்கள் செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
தன்னை 8 வயது முதல் தன் தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் மேலும் மனைவி குழந்தைகளை அடிப்பதை தன்னுடைய உரிமையாக தன் தந்தை கருதியதாகவும் கூறியுள்ளார்.
ஆணும் பெண்ணும் ஒரு குழந்தை துன்புறுத்தப்பட்டால் அது அவருக்கு வாழ்க்கை முழுவதும் ஆறாத வடுவை தான் தரும். என் அம்மா மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கையை அனுபவித்தார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நான் 15 வயதில் அவருக்கு எதிராக பேசும் தைரியத்தை வளர்த்துக் கொண்டேன். எதுவாக இருந்தாலும் கணவனை கடவுளுக்கு நிகராக கருதும் நிலையில் என் அம்மா இருந்தார்.
எனவே நான் இதை அவரிடம் சொன்னால் நம்ப மாட்டார்களே என்று பயந்தேன். ஆனால் நான் 15 வயதில் பொறுத்தது போதும் என்று உணர்ந்து அவரை எதிர்க்க தொடங்கினேன்.
எனக்கு 16 வயது கூட ஆகவில்லை எங்களை என் தந்தை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். அடுத்த வேலை உணவு கூட கிடைக்காமல் நாங்கள் தவித்தோம் ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும் மன தைரியத்தோடு போராட வேண்டும் என்ற மனப்பான்மை எனக்கு வந்தது என தெரிவித்திருக்கிறார்.