என் இதயம் எப்போதும் பிரபுவுக்காக துடிக்கும்... - 32 வருடங்கள் கழித்து குஷ்பூ டுவிட்!
என் இதயம் எப்போதும் பிரபுவுக்காக துடிக்கும் என்று 32 வருடங்கள் கழித்து நடிகை குஷ்பூ உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்பூ
தமிழ் சினிமாவின் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து முன்னனி நடிகையாக உச்சம் பெற்றார் குஷ்பூ. இவர் ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் இன்று வரை நீங்கா இடம் பிடித்து வருகிறார்.
எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குஷ்பூவிற்கு கோயில் கட்டும் அளவிற்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளம். நடிகை குஷ்பூ, இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். 2 மகள்கள் உள்ளனர்.
வைரலாகும் நடிகை குஷ்பூ டுவிட்
இந்நிலையில், நடிகை குஷ்பூ சின்னத்தம்பி படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
‘சின்னத்தம்பி’ படம் ரிலீசாகி 32 ஆண்டுகள் ஆகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்மீது காட்டிய அன்பிற்கு நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். என் இதயம் எப்போதும் இயக்குனர் பி.வாசுவுக்காகவும், பிரபுவுக்காகவும் துடிக்கும். மனதை மயக்கும் இசையை கொடுத்த இளையராஜாவுக்கும், இப்படத்தை தயாரித்த கே.பாலு அவர்களுக்கும் நன்றி. நந்தினி கதாபாத்திரம் என்றென்றும் அனைவரது மனதிலும் நிலைத்திருக்கும். அனைவரது அன்பிற்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
Chinna thambi movie released on (12 April 1991) 32 years of chinna thambi❤️kush as Nandhini one of our fav character ? is a story of love, family bonds,and typical South Indian village sentiments .Film written and directed by #pvasu sir.100 days run in 47 screens.@khushsundar pic.twitter.com/1Tst9glpei
— Kushbu?Gayu (@Khushboo_mam) April 12, 2023