குபேரனின் முழு ஆசியை பெற்ற ராசிகள்! பணத்திற்கு ஒருபோதும் பஞ்சம் வராது
ஜோதிட சாஸ்திரப்படி, சில ராசிகள் குபேர பகவானின் முழு அருளை பெற்றுள்ளார்கள் எனப்படுகின்றது. இவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் கஷ்டம் வராது என கூறப்படுகின்றது.

குபேர ராசிகள்
ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு ராசிக்கும் சில கிரகங்கள் மற்றும் தெய்வங்களோடு தொடர்பு இருக்கும்.
சில ராசிகள் லட்சுமி தேவியின் ஆசியைப் பெற்றிருப்பார்கள் என கேள்விப்பட்டிருப்போம். அதே போல சில ராசிக்காரர்கள் செல்வத்தின் அதிபதியான குபேர பகவானின் ஆசியை பெற்றுள்ளனர்.
எந்த ராசழகள் குபேரனின் முழு ஆசியை பெற்றுள்ளதோ அந்த ராசிகளுக்கு கொங்சம் கூட 'பணப் பற்றாக்குறை' என்ற வார்த்தைக்கே இடமிருக்காது எனப்படுகின்றது.

அவர்களுக்கு எந்த கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் பணம் கைக்கு வந்து சேரும் அது மேஜிக் போல எப்படியாவது நடக்கும். இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே இந்த குறிப்பிட்ட ராசிகள் செல்வந்தர்களாக மாறுவார்களாம்.

ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்கள் மீதும் குபேரரின் ஆசி தாராளமாக இருக்கும்.
- ரிஷப ராசிக்காரர்கள் பணத்தை சம்பாதிப்பதிலும், சேமிப்பதிலும் திறமையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
- வாழ்க்கையில் விரைவாக நிலைபெற்று, பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைவார்கள் என்று ஜோதிட நம்பிக்கை கூறுகிறது.
- குடும்ப நலனுக்காக செல்வத்தை சரியாக பயன்படுத்தும் தன்மையும் இவர்களிடம் இருக்கும்.
துலாம்
- ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள 12 ராசிகளிலேயே துலாம் ராசி மிகவும் அதிர்ஷ்டமான ராசியாகும்.
- துலாம் ராசியினர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் திறமைசாலிகள்.
- வருமானத்தை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகள் இவர்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது.
- பணப்புழக்கம் தொடர்ந்து இருந்து, தொழில் மற்றும் வணிகத்தில் வளர்ச்சி காணக்கூடிய காலமாக இது அமையலாம்.
தனுசு
- தனுசு ராசியினருக்குக் குபேரரின் கவச அரண் எப்போதுமே துணையாக இருக்கும்.
- இவர்களது அகராதியில் 'பணக் கஷ்டம்' என்ற பேச்சே இருக்காது.
- தனுசு ராசிக்காரர்கள் கடின உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் முன்னேறுபவர்கள்.
- எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னணி இடத்தைப் பெறும் திறன் கொண்டவர்கள் என ஜோதிடம் கூறுகிறது.
- சொத்து சேர்க்கை, தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என நம்பப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).