நடிகை கோவை சரளாவின் சொந்த வீட்டை பார்த்ததுண்டா? படு வைரலாகி வரும் தகவல்
நடிகை கோவை சரளாவின் சொந்த ஊர், வீடு குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
கோவை சரளா
‘ஆச்சி’ மனோரமாவிற்கு அடுத்து, தமிழ் திரையுலகில் நடிகை கோவை சரளா என்று நாம் சொல்லலாம்.
தமிழ்நாட்டில் இருக்கும் கோயம்புத்தூரில் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர்.
கோவை சரளா இயற்பெயர் சரளா. பின் இவர் பிறந்த கொங்கு நாடான கோவை என்ற பெயரை அவரது பெயரின் முன்னாள் சேர்த்துக் கொண்டார்.
பள்ளிப்படிப்பை முடித்ததும் சினிமாவில் சேர்ந்து கொண்டார். இதுவரை1000 படங்களில் நகைச்சுவைத் திறமையை நடித்துள்ளார்.
குடும்பம்
,இவருக்கு நான்கு அக்கா, ஒரு அண்ணன். கோவை சரளா தான் கடை குட்டி.
சரளாவின் அம்மாவிற்கு 94 வயது ஆகிறது. தற்போது அவர் ஆரோக்கியமாகவும், நல்ல தெளிவாக பேசியும் நடமாடிக் கொண்டு இருக்கிறார்.
சொந்த ஊர்
வேலைக்காக கோவை சரளாவின் மொத்த குடும்பமும் கோவைக்கு வந்து விட்டார்கள். ஒரு வாடகை வீட்டில் கோவை சரளாவின் மொத்த குடும்பமும் வாழ்ந்திருந்தது.
15 வயது வரை கோவை சரளா அந்த வீட்டில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். சரளாவின் 15 வயதிற்கு பிறகு அந்த வீட்டை விட்டு கோவை சரளாவும் அவருடைய குடும்பமும் வெளியேறி விட்டார்கள்.
இப்போது கோவை மாவட்டத்திலேயே கோவை சரளாவின் சொந்த வீடு ஒன்று இருக்கிறது. அங்கு அவருடைய அம்மாவிற்காக ஒரு வீடும், சென்னையில் ஷூட்டிங் போக பிற நேரங்களில் கோவை சரளா வந்து வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது.
தற்போதைய நிலை
தற்போது வரை கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவில்லை. தனது சகோதரி,சகோதரன் பிள்ளைகளையே அவர் படிக்க வைத்து வருகிறார்.
மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.
தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய சகோதரன் சகோதரிக்காக கோவை சரளா அர்ப்பணித்து விட்டார்.
தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு தான் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.