தொங்கும் தொப்பைக்கு முடிவு கட்டணுமா? காலையில் இப்படி கொள்ளு கஞ்சி சாப்பிடுங்க
பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை பிரச்சினால் பாதிக்கப்படுகின்றார்கள்.
அழகிய உடல் கட்டமைப்பை கொண்டவர்களுக்கு கூட நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி வேலை செய்வதால் விரைவில் தொப்பை வந்துவிடுகின்றது.
ஆனால் அதனை இல்லாமல் செய்ய முயற்சித்து பலரும் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து மனஅழுத்தத்துக்கும் ஆளாகின்றனர்.
உங்களை அசிங்கப்படுத்தும் தொப்பையை வெறும் 30 நாட்களில் விரட்டி தட்டையான வயிரை பெற காலையில் எடுத்துக்கொள்ள வேண்டிய கொள்ளு கஞ்சியை அசத்தல் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்/125 கிராம்
அவல் - 200 கிராம்
தண்ணீர் - 400 மிலி
பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
சுடுதண்ணீர் - தேவையான அளவு
தயிர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு விதைகளை போட்டு நிறம் மாறும் வரைவில் வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றி குளிரவிட வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில், அவலை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கிக் ஆறவிட வேண்டும்.
பின்னர் ஆறவைத்த கொள்ளுவை மிக்சர் ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அவல் மற்றும் பொடித்த கொள்ளுவை சேர்த்து, தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் சீரகத்தை சேர்த்து, உப்பு தூவி நன்றாக கலந்துவிட்டு, குக்கரை மூடி 4-5 விசில் வரைவில் நன்றான வேகவிட்டு இறக்கி குளிரவிட வேண்டும்.
பின்னர் குக்கரை திறந்து கரண்டியால் நன்றாக மசித்து விட்டு, குக்கரை அடுப்பில் வைத்து, அதனுடன் சுடுநீரை ஊற்றி கலந்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளித்து, கஞ்சியுடன் சேர்த்து நன்கு கிளறினால் அவ்வளவு தான் அருமையாக சுவையில் கொள்ளு கஞ்சி தயார். அதில் சிறிது தயிர் கலந்து சாப்பிடுவதால் தொப்பை விரைவில் குறைய ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |