ரத்த சர்க்கரை அளவை டக்குன்னு குறைக்கணுமா? தோசை மாவில் இந்த பொருளை சேர்த்துக்கோங்க
தற்காலத்தில் அதிகரித்த துரித உணவுகளின் பெருக்கம், போதிய உடற்பயிற்சியின்மை, போன்ற காரணங்களினால், சர்க்கரை நோய் மற்றும் உடல் எடை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகளால் பெரும்பாலானர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் நமது முன்னோர்கள் கடின உழைப்பாளிகளாக இருந்ததுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறையை பின்பற்றியன் காரணமாக நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள்.
அப்படி முன்னோர்கள் ரத்த சர்கரை அளவையும்,உடல் எடையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள கொள்ளுவை தங்களின் தினரி உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டார்கள்.
அப்படி கொள்ளுவை கொண்டு எளிமையாகவும் சுவையாகவும் எப்படி தோசை செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
இட்லி அரிசி -- 2 கப்
கொள்ளு -2 கப்
உளுத்தம்பருப்பு -1/4 கப்
வெந்தயம் -1/2 தே.கரண்டி
சிவப்பு மிளகாய் -6
சிறிய வெங்காயம்-10
அல்லது ஒரு பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
உப்பு -தேவையான அளவு
கறிவேப்பிலை -சிறிதளவு
பெருங்காயம் -1 சிட்டிகை
சமையல் எண்ணெய்- 2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, கொள்ளு, உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தய விதைகள் ஆகியவற்றை ஒன்றாக குறைந்தது 2 மணி நேரம் வரையில் ஊற வைத்து எடுத்துகக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நன்றாக கழுவி எடுத்து,அதனுடன் வர மிளகாய், சிறிய வெங்காயம், இஞ்சி, பூண்டு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
தோசை மாவு பதத்திற்கு வரும்வரை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் ஒரு பாத்திரததில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பெருங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இந்த மாவை 4-5 மணி நேரம் வரையில புளிக்கவிட வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக ஊற்றிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சமையல் எண்ணெயை தோசையை சுற்றி ஊற்றி, தோசை பொன்னிறமாகும் வரையில் வேகவிட்டு எடுத்தால், அசத்தல் சுவையில் மொறுமொறுப்பான மெலிதான கொள்ளு தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |