கோலங்கள் சீரியல் ஞாபகம் இருக்கா? நடிகை தேவயானி பகிர்ந்த அந்த புகைப்படங்கள்
90's கிட்ஸ்களால் மறக்க முடியாத தொலைக்காட்சி தொடர்களில் மிக முக்கியமானது கோலங்கள்.
பெரியதிரைகளில் பல வெற்றிகளை குவித்த நடிகை தேவயானிக்கு சின்னத்திரையில் பாராட்டுகளை பெற்றுத்தந்த சீரியல் கோலங்கள்.
கிராமத்தின் மூலை முடுக்கு வரை தேவயானியின் புகழை கொண்டு சேர்த்தது என்றே கூறலாம்.
கதையமைப்பு, வசனங்கள், நடிகர்கள் என ஒவ்வொன்றையும் செதுக்கியிருப்பார்கள்.
கோலங்கள் தொடருக்காக காத்துக்கிடந்த தாய்மார்கள் ஏராளம், தேவயானியின் புகழுக்கு இணையாக புகழை பெற்றவர் அத்தொடரின் வில்லன் ஆதி.
இன்றளவும் மக்கள் மனதில் ஆதி என்ற கதாபாத்திரம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, அதே பெயருடன் எதிர்நீச்சல் சீரியலும் படுஜோராக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தேவயானி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பலரும் எங்களது பேவரைட் சீரியல், எங்கே போனீங்க ஆதி சார் என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |