ஐபிஎல் வரலாற்றில் லக்னோ அணி படைத்த சாதனை - கொல்கத்தாவை வெளுத்து வாங்கிய டி காக்!
ஐபிஎல் தொடரின் இன்றைக்கான போட்டியில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின.
டாஸ் வென்று லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டிகாக் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியை காட்ட தொடங்கினார்கள்.
இந்த கூட்டணியை பிரிக்க கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் எவ்வளோ முயன்றனர். ஆனால் கடைசி வரை இவர்கள் இருவரையும் அவுட்டாக்க முடியவில்லை.
இறுதி வரை நின்ற இந்த ஜோடி சிக்ஸர், போர் என ரன் மழையை பொழிய 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி, 210 ரன்களை குவித்தது.
டிகாக் 140 ரன்களை அடித்து, சாதனை படைத்தார். கே எல் ராகுல் 68 ரன்களை அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தில், பெங்களூரு அணியின் விராட் கோலி-ஏபி டிவில்லியர்ஸ் கூட்டணி 229 ரன்கள் அடித்ததே சாதனையாக உள்ளது.
டிகாக்கின் ஐபிஎல்லின் அதிக ரன்களை அடித்து 3வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து விளையாடி வரும் கொல்கத்தா அணி போராடி வருகிறது.