மும்பை அணியை ஒரே ஓவரில் பந்தாடிய சாதனை படைத்த பேட் கம்மின்ஸ் - அபார வெற்றி!
ஐபிஎல் 2022 போட்டியின் கொல்கத்தா மற்றும் மும்பை அணி இன்று மோதின. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய மும்பை முதல் 2 போட்டிகளில் விளையாடியதுபோலவே இந்தப் போட்டியிலும் தடுமாற்றதுடன் தொடங்கியது.
கேப்டன் ரோகித் இந்த மேட்சாவது பெரிய ரன் அடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுயது.
12 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனைத்தொடர்ந்து, இஷான் கிஷனும் 21 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க, பிரெவிஸ் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்த சூர்யகுமார் இந்த போட்டியில் களமிறங்கி 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக திலக் வர்மா 27 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார்.
இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய பொல்லார்டு கொல்கத்தா பந்துவீச்சை வாண வேடிக்கை காட்டினார். 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட 22 ரன்கள் விளாசினார்.
மரண காட்டு காட்டிய கம்மின்ஸ்
இந்நிலையில், வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியும் தொடக்கத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ரஹானே 7 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய சாம்பில்லிங்ஸ் 17 ரன்கள் மற்றும் நிதீஷ் ராணா 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 51 ரன்கள் விளாசி, கடைசி வரை களத்தில் இருந்தார்.
கோடைக்காலத்தில் வெண்டைக்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
15 வது ஓவர் வரை மேட்ச் வின்னிங் செய்ய வாய்ப்பு இருக்கிறது என நினைத்த மும்பையின் கனவை களத்தில் இறங்கிய அடுத்த நிமிடத்தில் இருந்து சுக்குநூறாக உடைத்தார் பேட் கம்மின்ஸ்.
16 வது ஓவரை வீசிய சாம்ஸ் ஒரே ஓவரில் மட்டுமே வாணவேடிக்கை காட்டிய கம்மின்ஸ் 35 ரன்களை அடித்து வெற்றி பெற வைத்தார்.
வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த கே.எல்.ராகுலின் சாதனையை கம்மின்ஸ் சமன்செய்தார்.
இந்த போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். மொத்தம் 15 பந்துகளை எதிர்கொண்ட கம்மின்ஸ் 4 பவுண்டரிகளையும், 6 மெகா சிக்சர்களையும் விளாசி மொத்தம் 56 ரன்கள் சேர்த்தார்.
இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.