மனைவியுடன் வெளிநாட்டில் உலா வரும் கிங்ஸிலி.. வெட்கத்தில் சிவந்த சங்கீதா- வைரல் காட்சி
மனைவியுடன் வெளிநாட்டில் சுற்றித்திரியும் கிங்ஸிலியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கிங்ஸிலி - சங்கீதா
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.
இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.
கணவருடன் நெகிழ்ச்சி தருணங்கள்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன் சினிமா பிரபலங்கள் பலர் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து திருமண வாழ்க்கையில் குஷியாக இருக்கும் சங்கீதா, அவரின் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், கணவருடன் வெளிநாட்டில் சந்தோசமாக பொழுதை கழிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், “ இப்படியே கடைசி வரை மனைவியுடன் வாழ வேண்டும்...” என வாழ்த்தும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |