ராஜ நாகத்துடன் அமர்ந்து அசால்ட்டாக தேனீர் பருகும் நபர்... பகீர் கிளப்பும் காட்சி
நாரொருவர் ராஜ நாகத்துடன் அமர்ந்து முகத்தில் புன்னகையுடன் அசால்ட்டாக தேனீர் பருகும் மெய்சிலிக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஜ நாகமானது உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்புகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கின்றது. பெரும்பாலும் மக்கள் நாகப்பாம்பையும் ராஜ நாகத்தையும் ஒன்றாகவே கருதுகின்றனர்.
ஆனால் நாகங்களை விடவும் கொடிய விஷத்தன்மை கொண்டது தான் ராஜ நாகம். ராஜ நாகம் சராசரியாக 6 மீட்டர் வரை அதாவது சுமார் 20 அடிவரையில் வளரக்கூடியதாக இருக்கும்.
ராஜ நாகங்கள் கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் கூட வேட்டையாடி உண்ணும் தன்மை கொண்டவை. ராஜ நாகம் தீண்டினால் சுமார் 20 நிமிடத்துக்குள் உயிரையை இழக்க நேரிடும்.
இவ்வளவு விஷத்தன்மை நிறைந்த ராஜ நாகத்துடன் நபரொருவர் துளியும் பயமின்றி புன்னகையுடன் தேனீர் பருகும் காட்சி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
![முதன்முறையாக விமானத்தை ஓட்டும் பைலட்டின் சட்டை கிழிக்கப்படுவது ஏன்?](https://cdn.ibcstack.com/article/24b66abf-6677-459c-b9ce-1e1f33b18c9b/25-67ae080907cc3-md.webp)