அந்த நாட்டு கலாச்சாரம் இங்க வந்தா மரண தண்டனை தான்: எச்சரிக்கை விடுத்த வடகொரிய அதிபர் கிம்!
இந்த சுதந்திர உலகில் விரும்பிய உணவை உண்ண முடியாமல், நினைத்ததை பேச முடியாமல், பிடித்த ஆடையை உடுத்த முடியாமல் வாழும் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அது வடகொரிய நாட்டு மக்கள் தான்.
ஏனென்றால், வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன். கிம் மற்றும் அவர்களின் குடும்பத்தார் செய்து வரும் ஆட்சி தான்.
மேலும், வட கொரியாவில் அரசிற்கு தெரியாமல் சிலர் ஆல்பம் பாடல்கள், ஹாலிவுட் படங்கள் பார்ப்பதும் உண்டு. அவ்வாறு மாட்டுபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை நினைத்து கூட பார்க்க முடியாத அளவில் இருக்கும்.
அதோடு தென்கொரிய கலைஞர்களின் நாடகங்களை பார்த்தாலோ அல்லது பாப் இசையை ஆர்வமாக கேட்டாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும் என தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்
வடகொரிய அதிபர் கிம். இதனிடையே, தென்கொரிய பாடகரான K-Pop என்னும் கலைஞர், வட கொரிய மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாகி வருகிறார். இதனால் கடுப்பான Kim jong Un, நாட்டின் கலாச்சாரத்தை காக்க புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.
இதற்கு முன், தென்கொரிய இசை, நாடகங்களை பார்ப்பவர்கள் 15 ஆண்டுகள் வரை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதோடு, கடுமையான தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது சிறிய மாற்றம் கொண்டுவரப்பட்டு, தென்கொரிய கலாச்சாரங்களை பின்பற்ற நினைப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம், தென் கொரிய மக்கள், வட கொரிய மக்களைப் போல் அல்லாமல் சுதந்திரமாக வாழ்பவர்கள். தென்கொரிய கலாச்சாரத்தை பின்பற்றி வடகொரியாவிலும் மக்களுக்கு சுதந்திரமான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆசை வந்துவிடும் என பயப்படுகிறார் கிம் ஜாங் உன்.
அதுமட்டுமின்றி, அவர் தென் கொரிய பாப் பாடகர் K-Pop, எங்கள் கலாச்சாரத்தை அளிக்க வந்த 'புற்று நோய்' என கடுமையாக விமர்சித்துள்ளார்.