யாரோ என்னை கொல்ல வர்றாங்க!.. வீட்டுக்குள் மூவர் சடலமாய்- வெளியான திடுக்கிடும் சம்பவம்
தமிழகத்தில் பெற்றோர் உள்ளிட்ட மூவரை கத்தியால் குத்திய வாலிபர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயதாஸ் (71), இவருடைய மனைவி சாலினி.
இவர்களுக்கு ஜெகன்(29), ஜேக்கப்(23) என 2 மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜெயதாஸ் வீட்டில் இருந்து அலறும் சத்தம் கேட்டது. உடனே, அக்கம் பக்கத்தினர் ஜெயதாஸ் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது ஜேக்கப் மிகவும் ஆவேசமான நிலையில் மாடியில் நின்று கொண்டிருந்தார்.
திடீரென அவர் மேலிருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஜெயதாஸ், அவரது மனைவி சாலினி மற்றும் ஜெகன் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.