கிட்னி பிரச்சினை தடுக்க வேண்டுமா? கட்டாயம் இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!
இன்றைய நவீன காலக்கட்டத்தில், பலருக்கும் மாரடைப்பு மற்றும் கிட்னி பிரச்சினை சர்வ சாதாரணமாகிவிட்டது. சிறிய வயது குழந்தைகள் கூட கிட்னி பிரச்சினையால் பாதிக்கபடுவதை காணமுடிகிறது.
இதற்கு முக்கிய காரணம், உடலில் இருந்து கழிவுகள் முறையாக வெளியேறாமல் சிறுநீர் பாதைகளில் தங்குவதால் கிட்னி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
முதலில் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருப்பதற்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம் கற்கள் உருவாவதை தடுப்பதில் மக்னீசியம் மூளையாக செயல்படுவதால், மக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாது.
அதற்காக, பருப்பு வகைகள், வெண்ணெய், அவக்கோடா ஆகிவற்றை தினசரி உணவில் எடுத்துகொள்ளலாம். மக்னீசியம் நிறைந்த உணவுகள் ஆக்சலேட்டுகள் குடலில் உறிஞ்சுவதைத் தடுத்து, சிறுநீரக கற்கள் உருவாதையும் தடுக்கின்றன.
சிறுநீரக கற்கள் உருவாதை தடுக்க வேண்டும் என்றால், கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, பால், பாலடைக்கட்டி, தயிர் போன்றவைகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
இதனை அன்றாட டையட்டில் சேர்த்துக்கொண்டால், கால்சிய படிகங்கள் சிறுநீர் பாதையில் தங்காமல், சிறுநீருடன் சேர்ந்து வெளியேறிவிடும். சிட்ரிக் உணவுகள் சிறுநீர் பாதையில் தேங்கும் படிகங்களை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன.
எலுமிச்சை பழம், ஆரஞ்சு, திராட்சை பழங்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்து இருக்கின்றன. அந்த வகை உணவுகளை அதிகளவு எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீர் பாதையில் தேங்கியிருக்கும் கால்சியம் ஆக்சலேட்டுகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன.
மேலும், சிறுநீரில் கால்சியம் வெறியேறுவது அதிகரிக்கும்போது, உங்கள் டையட்டில் உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகளை குறைக்க வேண்டும்.
உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் இருப்பது சிறுநீரக கற்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. அதனால், உடலில் எப்போதும் நீர் பற்றாக்குறை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிகளவு நீர் அருந்துதல் அல்லது பழச்சாறை பருகி வந்தால், சிறுநீர் பாதையில் கற்கள் உருவாகாது.