இந்த நோய் இருப்பவர்கள் இதை ஒரு நாளும் சாப்பிடக்கூடாது; என்னென்ன உணவுகள் தெரியுமா?
Kidney Disease
By Kirthiga
பொதுவாகவே சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்களை உணவு கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கி இருப்பார்கள்.
அதிலும் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே இந்த பிரச்சினையில் பாதிப்பவர்கள் எந்த வகையாக உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை பார்க்கலாம்.
சிறுநீரகக் கல்
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் சிறுநீரகக்கற்கள் உருவாகிறது.
இந்த பிரச்சினை இருப்பவர்கள் ஆக்சலேட் சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.
சாப்பிடக்கூடாத உணவுகள்
-
திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை, இனிப்பு பண்டங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வால்நட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- மீன், ஆட்டு இறைச்சி, முட்டை, மாட்டு இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கவும். இதில் அதிகளவு புரதம் காணப்படுகிறது. இது கல் வளருவதை அதிகரிக்கும்.
- தக்காளி மற்றும் விட்டமின் சி நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளவும்.
- அதிக உப்பு மற்றும் இனிப்பு இருக்கக்கூடிய உணவுகளை முற்றிலும் தவிர்த்துக்கொள்ளவும். மீறியும் எடுத்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் அதிகமாக உருவாகும்.
- இவைகளை தவிரித்து, அதிகம் தண்ணீர் உள்ள உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதை எடுத்துக்கொண்டால் மாத்திரமே சிறுநீர்கழிக்கும் போது கல் அதன் வழியாக வெளியேறும்.
- மேலும் வறட்சியான மற்றும் கடைகளில் விற்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதையும் முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்துக்கொள்ளவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US