கில்லாடி ஜோடிஸ்: Final-க்கு தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள்... வெளியானது ப்ரொமோ
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியில் Final-க்கு தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள் விபரம் வெளியாகியுள்ளது .
கில்லாடி ஜோடிஸ்
பிரபல ரிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடிஸ் என்ற தலைப்பில் ஒளிபரப்பாகியது.
வெறும் இரண்டு சீசன்கள் மட்டுமே ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி பின்பு நடைபெறவில்லை. இந்நிலையில் கில்லாடி ஜோடிஸ் என்ற பெயரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
கடுமையான போட்டியாக இருக்கும் இந்நிகழ்ச்சியின் டாஸ்க் அனைத்தையும் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நடிகர் சஞ்சீவ் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இன்னும் சில தினங்களில் பைனல் நிகழ்ச்சியாக இருக்கும் நிலையில், ஐந்து ஜோடிகள் இறுதிச்சுற்று போட்டியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிராண்ட் ஃபினாலேவின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |