ஏ.ஆர்.ரகுமானுக்கு டப் கொடுக்கும் இசைபுயலின் மகள்! ஸ்டியோவில் வெளியான புகைப்படம்
இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கும் கதீஜா ரகுமான் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கதீஜா ரகுமானின் இசை பயணம்
சினிமாவிற்குள் “மின்மினி” என்ற திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் அறிமுகமாகிறார்.
இந்த அப்பேட்டை ஹலிதா ஷமீம் அவருடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான “எந்திரன்” திரைப்படத்திலுள்ள “புதிய மனிதா..” என்ற பாடலில் வரும் சிறிய வரிகளை கதீஜா ரகுமான் அவருடைய இனிமையான குரலில் பாடியிருப்பார்.
இதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன் 2” என்ற பிரமாண்ட படத்தில் “சின்னஞ்சிறு நிலவே..” என்ற பாடலை பாடியுள்ளார்.
புதிய அவதாரம்
இவரின் குரல் ரஹ்மான் சாரை போல் இனிமையாக இருப்பதால் மக்களுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், பாடகியாக இருந்து கஜீதா இசையமைப்பாளராக மாறுவது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “அப்பாவை போல் தானே பிள்ளையும் இருக்கும்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்
So happy to be working with this exceptional talent, Khatija Rahman for #MinMini. The euphonious singer is a brilliant music composer too. Some great music underway! ✨✨@RahmanKhatija @manojdft @Muralikris1001 @_estheranil_ @GauravKaalai @Pravin10kishore @raymondcrasta pic.twitter.com/b9k1YjuxtU
— Halitha (@halithashameem) June 12, 2023